DAEIOU - தயவு
சன்மார்க்கக் கலைக் களஞ்சியம் தொகுப்பதற்கு அன்பர்களிடமிருந்து தகவல் வேண்டுதல்.
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் தோறும் வள்ளற் பெருமானின் நெறி பரப்பும் சன்மார்க்க சங்கங்கள் பலப்பல இயங்கி வருகின்றன. அவை, சத் விசாரம் பரோபகாரம் போன்ற பணிகளில் தம்மை நன்கு ஈடுபடுத்திக் கொண்டுள்ளன, அதன் மூலம், பல சன்மார்க்க அன்பர்கள், வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினைத் தெரிந்து கொண்டுள்ளனர்.



    ஆனால், ஒட்டு மொத்தமாக சன்மார்க்க சங்கங்கள் உள்ள இடம், அமைந்த காலம், ஆரம்ப கால நிறுவனர், தற்போது அதனை நிர்வகிப்பவர், அதன் பல்வேறு செயல்பாடுகள், தொடர்பு (செல்) எண் போன்ற விபரங்கள் சன்மார்க்கக் கலைக் களஞ்சியம் தொகுப்பதற்குத் தேவைப்படுகின்றன. 

    எனவே, இணைய தளத்தில், இதனைக் கண்ணுறும் சன்மார்க்க அன்பர்கள், தத்தமது மாவட்டத்தில் உள்ள சன்மார்க்க சங்கங்கள் பற்றிய விபரங்களை, இந்த கோரிக்கை நோட்டீஸில் கண்ட அன்பர்களுக்கு உடனே அனுப்பி வைக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
20140224_082503.jpg

20140224_082503.jpg

20140224_082514.jpg

20140224_082514.jpg

13 Comments
om prakash
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

அருமையான முயற்சி !!!
Tuesday, February 25, 2014 at 07:44 am by om prakash
Daeiou  Daeiou.
All the Sanmarga Sangamms are requested to send the deails about their Sangams to the above organisers either by post or through e.mail for consolidation.
Wednesday, February 26, 2014 at 09:37 am by Daeiou Daeiou.
Daeiou  Daeiou.
கலைக் களஞ்சியம் தொகுப்பதற்கு (மதுரை) திரு இராம. பாண்டுரெங்கன் ஐயா....தயார்..

ஆனால்...அதற்குரிய தகவல்கள் தரவேண்டுமே...

மாவட்டந்தோறும் உள்ள சன்மார்க்க அன்பர்கள்தான் இதற்கு
தமது முழு ஒத்துழைப்புத் தரவேண்டும்.

தாமதமில்லாமல் அவர்கள், ஒவ்வொருவரும் தமது மாவட்டச்
சன்மார்க்க சங்கங்கள் குறித்த தகவல்களைத் தந்தால், இந்தப் பணி
விரைவில் நிறைவேறும்.

இதுவரை ஒருவருமே...இதில் ஈடுபாடு காட்டவில்லை என்பது
ஒரு வருத்தப்பட வேண்டிய விஷயம்.
Tuesday, March 11, 2014 at 16:16 pm by Daeiou Daeiou.
Daeiou  Daeiou.
தமது மாவட்ட சன்மார்க்க சங்கங்களைப் பற்றிய விவரங்களை யாரேனும், திரு பாண்டுரெங்கன் ஐயாவிற்கு அனுப்பினார்களா என்பது தெரியவில்லை.

அனுப்பிய அன்பர்கள், இந்த இணைய தளத்தில் அனுப்பியது குறித்து தகவல் எழுதலாமே....
Friday, March 21, 2014 at 13:50 pm by Daeiou Daeiou.
Daeiou  Daeiou.
It may be sent either in Tamil or English. Only thing, a list for the entire District has to be sent to Thiru Pandurengan....
Sunday, March 23, 2014 at 08:51 am by Daeiou Daeiou.
Anandha Barathi
Dear All,

Please help to complete the golden project.

Thanks.
Thursday, July 10, 2014 at 11:30 am by Anandha Barathi
Daeiou  Daeiou.
கலைக் களஞ்சியம் தயார் செய்வதற்குரிய சங்கம் வாரியான விவரங்களை திரு பாண்டுரெங்கன் ஐயா அவர்களுக்கு அனுப்பி வைக்கலாம். மேலும், கீழ்க்காணும் இ.மெயில் முகவரிக்கு
அனுப்பினாலும், அவ்விவரங்கள், திரு பாண்டுரெங்கன் ஐயாவுக்கு
அனுப்பி வைக்கப்படும்.

getramanujam@gmail.com
Friday, July 11, 2014 at 07:19 am by Daeiou Daeiou.
Daeiou  Daeiou.
ஒருவரிடமிருந்தும் ஒரு தகவலும் வராத நிலைதான் இன்றளவும் உள்ளது. இந்த இணைய தளத்தைப் பார்வையிடும் சன்மார்க்க அன்பர்கள், தாம் சார்ந்த மாவட்ட சன்மார்க்க சங்கத்தினரிடம் இது குறித்துத் தெரிவித்து, தமது மாவட்ட சன்மார்க்க சங்கங்கள் குறித்த விவரங்கள் அனுப்புமாறு செய்தால்..அவற்றைத் தொகுக்கலாம்.

ஊர் கூடித்தான் சுத்த சன்மார்க்கத் தேரினை இழுக்க வேண்டியிருக்கின்றது. இந்த அருட் பணியில் அனைவரும் ஈடுபட வேண்டுவது...கோரிக்கை...
Wednesday, July 23, 2014 at 13:50 pm by Daeiou Daeiou.
Chitrambalam Ramaswamy
Vallalar Ara Nilayam,
Mukkulam, Gnana Deeba Salai,
Pennadam, Cuddalore Dist, Tamilnadu -606105

President - M.Muthujothi
Secretary - R.Shanmugam
Treasurer - Ramaswamy

Year of Inception - 1989
It runs an orphanage for 25 young boys and an old age home for 10 people including female.

The premises is under an area of one acre with buidling for Dhyana Mandapam and boys residence in 10,000 sq feet.
They have constructed a 7000 sq feet single storeyed RCC building now with 12 rooms (fully furnished) to accomodate 24 old age people inside.
The above information may be used for your consolidation works.
Chitrambalam.
Thursday, July 24, 2014 at 12:10 pm by Chitrambalam Ramaswamy
Daeiou  Daeiou.
கோரிக்கைக்குச் செவி சாய்த்து, பெண்ணாடத்தில் இயங்கும் வள்ளலார் சங்கம் குறித்து அன்பர் தகவல் அனுப்பியமைக்கு நன்றி.

இதுபோன்றே, தத்தமது சன்மார்க்க சங்கச் செயல்பாடுகள் குறித்த தகவல்களை, ஏனைய அன்பர்களும் தெரிவித்தால், அவையனைத்தையும் ஒருங்கிணைத்து, சன்மார்க்கக் கலைக் களஞ்சியம் வெளியிடலாம்.

திருவருள் என்று கூட்டி வைக்கின்றதோ ! ...
Friday, July 25, 2014 at 04:40 am by Daeiou Daeiou.
APJ Arul
Name of Institution: M/s Karunai Sabai Salai
Name of Founder : Mrs. E. Ramalakshmi,M.A.,

Activities :1. conducting Meetings and Prayer
in the Grace Hall.
2.Publishing KARUNAI Journal
3.Contemning activities of persons who
focusing our His Holiness Vallalar on
his earlier saiva religion.
4.All effort steps to depict final
principle of His Holiness Vallalar
Address : 34 Grace Hall,Poombukar Nagar North Extens
-ion,Karunai sabai Salai,Uthangudi,
Madurai Tamilnadu 625 107
apjarul1@gmail.com, 9095050785
www.facebook.com/apjarul
Sunday, July 27, 2014 at 10:36 am by APJ Arul
Daeiou  Daeiou.
மேலும் தகவல்கள், ஏனைய சன்மார்க்க சங்கங்கள் அனுப்பி வைத்தால், அவை, திரு பாண்டுரெங்கன் ஐயாவுக்கு கலைக் களஞ்சியம் தொகுப்பதற்காக அனுப்பி வைக்கப்படும்.
Monday, July 28, 2014 at 16:23 pm by Daeiou Daeiou.
Daeiou  Daeiou.
368 முறை படிக்கப்பட்ட இந்த அறிவிப்பு, ஏனோ சன்மார்க்க சங்க அன்பர்களின் கவனத்தைக் ஈர்க்கவில்லை இருவர் தவிர.....
Friday, August 1, 2014 at 14:20 pm by Daeiou Daeiou.