Karunai Sabai-Salai Trust.
இதுகாறும்என்னொடுநீங்கள்பழகியும்.... இன்னதென்றுதெரிந்துகொள்ளவில்லை---வள்ளலார்".
(உபதேசக் குறிப்பில் பக்கம் 345ல்)

கணபதி, சுப்பிரமணிய சுவாமிகளும்
தத்துவங்களே தவிர வேறல்ல.

புராணங்களின் இருதயமெல்லாம்
தத்துவ சம்மாரமே.

இதன் உண்மை சுத்த சன்மார்க்கத்தில்
விவரமாய் வெளியாகும்.---“வள்ளலார்”.

முபா: (Thiru Mupa Ayya )

இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை இருவாய்ப்புன்செயில் எருவாக்கிப்போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டு
தெருட்சாரும் சுத்த சன்மார்க்க நன்நீதி சிறந்து விளங்க ஓர் சிற்சபை காட்டும்
அருட்ஜோதி வீதியில் ஆடச் செய்தீரே அருட்பெருஞ்சோதி என் ஆண்டவர் நீரே.
வள்ளலாரின் இந்த ஒரு பாடல் போதும் என்று எண்ணுகிறேன்,. நன்றி வந்தனம்.

Thanks to www.vallalar.org.
பேருபதேசம்
ஸ்ரீமுக வருஷம், ஐப்பசி மாதம், 7ஆம் நாள், புதவாரம், பகல் 8 மணிக்கு, மேட்டுக்குப்பம் என்னும் சித்திவளாகத் திருமாளிகையில் முதல் முதல் கொடி கட்டினவுடனே நடந்த விவகாரத்தின் குறிப்பு.

சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும்,
வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம்.
ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும், இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும். அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற - திருவருட்பாவில் அடங்கியிருக்கிற - ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.
இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை.
தி.ம.இராமலிங்கம் TMR கடலூர்:
அதனால் கருணைக்கு தடைகளாக இருக்கின்ற ஆசாரங்கள் என்னும் தோய்வில் இருந்து எம்மை மீட்டெடுக்க வேண்டும் என வேண்டுகிறார். அதிலிருந்து மீண்டதனால் சுத்தசன்மார்க்கம் இவ்வுலகில் நம்பெருமானாரால் உதித்தெழுந்தது. நாமும் அத்தோய்விலிருந்து விரைவில் முற்றிலும் விடுபடவேண்டும் என்பதே நம்பெருமானாரின் உபதேசமாகும்.

சுத்த சன்மார்க்கத்தார்கள் எதற்காக சமய லட்சியத்தை கைவிடவேண்டும்?

சுத்த சன்மார்க்கத்தின் ஒரே சாதனம் "தயவு" என்னும் கருணையே. இறையருள் கிடைக்க இந்த 'தயவு' விருத்தியாக வேண்டும் என்கிறார் வள்ளலார்.

தயவு விருத்திக்கு தடையாக சாதி, சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் உள்ளன. அவையை ஒழித்தால்தான் "பொதுநோக்கம்" வரும்.

இந்த "பொது நோக்கம்" சுத்த சன்மார்க்கத்தின் "சத்திய ஞானாசாரம்" ஆகும்.

சாதி, சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் எவை என தெரிதல் வேண்டும். அவையாவன.

ஜாதி, குலம், ஆசிரமம், லோக, தேச, கிரிய, சமய, மத, மரபு, கல, சாதன, அந்த, சாஸ்திர ஆசாரங்கள் ஆகும். தயவு விருத்திக்கு இவைகள் தடையாக உள்ளன. இவை அனைத்தும் உலகில் காணும் சமய, மதங்களில் உள்ளன.

I PRAY THOSE ( HOLDING THEIR FOOT) WHO ARE INVOLVED SPREADING VALLALAR'S THOUGHTS, PLEASE DEPICT OUR HIS HOLINESS VALLALAR ON HIS FINAL PRINCIPLE WHICH IS CALLED AS SUDDHA SANMARGA .-------- apj.arul, 9095050785.

POTHUMDA SAMI ---- ETHUKMELA SOLLA MUDIYATHU ---- POTHUMADA SAMI.

“உண்மை சொல்ல வந்தனனே-என்று
உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை”.                                             ----    “வள்ளலார்”.

ayya vallalar ayya. Your honour don't come out.

kandakottam.jpg

kandakottam.jpg