Karunai Sabai-Salai Trust.
தத்துவங்களே ஒழிய வேறல்ல:
புராண ஹ’ருதயம்:

பெரியபுராணத்திற் குறித்த 63 நாயன்மார்களும் தத்துவங்களே ஒழிய வேறல்ல.

அதை அதை விசாரித்து அனுஷ்டித்தால், அது அது ஒவ்வொரு சித்தியைக் கொடுக்கும்.

கணபதி, சுப்பிரமணிய சுவாமிகளும் தத்துவங்களே தவிர வேறல்ல.

புராணங்களி னிருதயமெல்லாம் தத்துவ சம்மாரமே.
இதன் உண்மை சுத்த சன்மார்க்கத்தில் விவரமாய் வெளியாகும்.

சமய நூல் உண்மை:

மாணிக்கவாசக சுவாமிகளும் 63 நாயன்மார்களும் மனிதரல்லர்.
தத்துவங்கள்.

தேவாரம் திருவாசகம் முதலியவைகள் மேற்குறித்தவர்கள் பாடியனவல்ல,
சித்தர்கள் சில சித்திகளைக் குறித்துக் கற்பனையாய்ச் செய்த சரித்திரம்;

அதற்கு மேற்கொள் வேண்டுவதின் பொருட்டுச் சில பாடலுஞ் செய்து,
புராணத்தில் மேற்குறித்தபடி பெயரிட்டு, அவர்கள் செய்ததாகப் பரிச்சயஞ் செய்ததே தவிர,
உண்மையல்ல.

இவற்றிற்குரிய தாத்பரியங்களும் உண்மைகளும்
சுத்த சன்மார்க்கத்தில் பகிரங்கமாய் இனி வெளிப்படும். (வேறொரு குறிப்பு)

சூரபத்மனுடைய யுத்தம் முழுமையும் தத்துவ சம்மாரமே.
சுப்பிரமணியர் விநாயகர் மயிலின் மேலும் பெருச்சாளியின் மேலும் ஏறினார்களென்கிற தாத்பர்யம் வேறு.

அது தெரியாம லந்தச் சுவாமிகளைத் திருவிழாக் காலத்தில்
வாகனங்களின் மேல் ஏற்றுதல் தெரியாமை.
 சமய நூல்களில் பிழை
சமயமத சாத்திரங்களில் அனேக இடத்தில் பிழைகளிருக்கின்றன.
அதற்குக் காரணம் அவற்றை இயற்றியவர்கள் மாயையின் சம்பந்தத்தை அடைந்திருந்தவர்கள்.
ஆகையால் முன்னுக்குப் பின் மறைப்புண்டு தப்புகள் நேரிட்டிருக்கின்றன.
மாயையை வென்ற சுத்த ஞானிகளுக்கல்லது மற்றவர்களுக்குப் பிழையற இயற்ற முடியாது.
அந்தப் பிழைகள் சுத்தசன்மார்க்கம் விளங்குகின்ற காலத்தில் வெளிப்படும்.--- வள்ளலார்.(from உபதேசக் குறிப்புகள்)

சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்.---- வள்ளலார்.-
vallalar B&W.jpg

vallalar B&W.jpg