www.vallalarspace.com/durai
ஒரு 'அறிஞர்' - என்பவர் சுத்த சன்மார்க்கியா?
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

சீலரே சரியர் இந்திரியநிக்கிரகர் பத்தர்
நோன்பரே கிரியர் கரணநிக்கிரகர் முத்தர்
செறிஞரே யோகர் சீவஅனுபூதியர் சித்தர்
ஞானரே சன்மார்க்கி ஆன்மஅனுபூதியர் நித்தர்.

குறிப்பு: தமிழில் அறிஞர் என்பது ஞானர் என்ற ஒரே பொருளையே குறித்தாலும், ஆன்ம அனுபூதி பெற்றுத் தன்னை அறிந்த சுத்த சன்மார்க்கர்களைச் சுத்த அறிஞர்கள் என்று சொல்லுவதைத் தவிர்த்து, சுத்த ஞானிகள் அல்லது அருளாளர்கள் என்று சொல்லுவதே உத்தமம்.

அறிஞர்கள் யோகிகளைவிட உயர்நிலையை அடைந்தவர்களே என்றாலும், இவர்கள் உலகியலில் அதிகம் அழுந்தியிருப்பதால், ஆன்ம அனுபூதி பெற்று நரை-திரை, நோக்காடு-சாக்காடுகளை வெல்ல முடியாது இறந்து போகின்றார்கள். ஆகையால், அறிஞர்கள் அனகப் பெருவாழ்வை அடைந்த சுத்த ஞானிகளான சுத்த சன்மார்க்கிகளுக்கு ஒப்பானவர்கள் அல்லர் என்பதை அறிந்து கொள்ளல் வேண்டும்.

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்

நன்றி, வணக்கம்!
அன்பன் ஆன்மநேயன்,
துரை சாத்தணன்
Sathyamangalam.  Ramanatham Sathyanarayanan  Sathyanarayanan.  S.R
Scientific knowledge downwards fearless arms wars crushing innocents we Vallalar followers weekly Friday prayers worldly drone killings halt them bring peace pray for Indo pak Muslims cooperation to halt year mercilessvjilliings
Sunday, February 18, 2018 at 21:58 pm by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R