www.vallalarspace.com/durai
இலவசமாய் இயற்கையில் வந்தநம்வாழ்வேஓர் மாபெரும்யோகம்!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

என்பும் பிறர்க்குஎனவே அருள்வழிநின்றே வாழ்கின்ற
அன்பறிவு ஒழுக்கம் உடையபெருமக்காள் வணக்கம்பல
நலமொடு நற்செல்வங்கள் எலாம்மிகும் நல்வாழ்விலே
வளமொடு இன்புற்று வாழ்வாங்குவாழ்க எக்காலத்தும்!

இயற்கை உண்மையே அனைத்துச்சத்துக்கும் வித்தாகும்
இயற்கை உண்மையானது இருகூறாக அனுபவமாகின்றது
இயற்கை உண்மையின் ஒருஉருவம் அருளறிவுத்திறனாகும்
இயற்கை உண்மையின் மறுஉரு தனிப்பெருங்கருணையே!

அருள் அறிவுத் திறன்பெற்றிட இயற்றுகவே
அருட் சத்துவிசாரம் அத்துடன் ஒருங்கேதனிப்
பெருங் கருணையும் பெறவேண்டும் தன்தயவைப்
பெருக்கிப் பிறவுயிர் நேயச்சேவை அதனாலே.

அருட் சத்து விசாரம் என்பது
பிறர் குற்றம் விசாரிப்பது அல்ல
அண்ட பிண்ட இயல் உண்மையை
ஆய்து கண்டுகொள் ஞான யோகமே!

சத்து விசாரம் என்கின்ற ஞானயோகமானது
செத்தவர்களை எழுப்பும்ஓர் மாபெரும் யோகம்
மத்தயோகமெலாம் இவ்வுலகில் இதற்குக் கீழேதான்
சத்துவிசாரத்தால் நித்திய நிராசை நிலைபெறுவரே!

சத்துவிசாரம் விரும்பாது மந்தமே பயிற்றுகின்ற
மத்தயோகாக்களை ஏமாக்கள் என்றே அறிந்திடுக
நித்தியவாழ்வுதரும் நிர்மல விழிப்பு நிலையினை
மத்தயோகாக்கள் அடையாமல் இறந்தே போயினர்


இலவசமாய் நான்யோகம் கற்றுத்தருகிறேன் என்கிறேன்எதற்காம்
இலவசமாய் மண்புழுவை மீன்தூண்டியில் இட்டுத்தருவதுபோலவே
இலவசமாய்த் நான்தருவதற்கு எதுவும்இங்கே எனதுஅல்லவேஅறிக
இலவசமாய் இயற்கையில் வந்தநம்வாழ்வேஓர் மாபெரும்யோகம்!

பிறவுயிர் நேயத்தைப் பேணிப் பெருக்காதவர்க்கு
தமதுயிர் சாகாமல் இருக்கத் திருவருள்சுரக்காதே
தயவுவழி விழித்தே உயிர்ச்சேவை செய்யார்க்குத்
தவம்புரி மெய்யனுபவம் கைகூடாதே தடைபடுவர்

எல்லாம் செயல்கூடும் நம்அருட்திரு அம்பலத்தே
எல்லாம் வல்லான் அருட்தாளையே ஏத்துகசித்தே
எல்லாப் புகழும் அருட்பெருஞ் ஜோதியர்க்கேநமது
எல்லா நிலையிலும் அவர்பேரருட் துணையிருக்கு!

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

நன்றி, வணக்கம்!
அன்பன் ஆன்மநேயன்,
துரை சாத்தணன்
Sathyamangalam.  Ramanatham Sathyanarayanan  Sathyanarayanan.  S.R
Dear Thiru Durai sathanan I wish to preach Vallalar way of bringing all to his food is possible I have born on 04-01-1948 but my school recorded as 06=01=1947 with this passport as tourist I visited sree lanka in 1973/1975/Abudhabi /1976/Italy/France/u.k /Frankfurt Vienna’ Switzerland Greece Bach through Iran on 54=day’s travel where I happened to foot Tabriz where Baha’i Faith founder Bab gunned by troops two time first inspite of gunned down by troops but he was seen by troops near by prision by divine power Baha’i Faith like forest fire spreader many temples sprung up in 173 years including lotus temple ofDelhi I am sure to join your prabagating team work linking karanampattu Kandaswamy pillai grand son of caddalure Ramalingham is very close to my heart in my seventy th year what ever role you assign my wife set chandrika stayed with me during my British Petroleum posting having s.n.umesh born on 30-12-1981& second son S.nanand born on1-11-1985 I have suitable Telugu speaking dagterinlaw now good day brother durai sathanan I wish to your call in earnest effect in few minutes Vallar vazhi vazvom valarvom vuyarvom vaiyagthiley I pray to follow his path margham
Saturday, November 25, 2017 at 12:09 pm by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R