www.vallalarspace.com/durai
போகாத பொன்னடிஈயும் போனகத்தைப் போற்றுகவே!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

என்பும் பிறர்க்குஎனவே அருள்வழிநின்றே வாழ்கின்ற
அன்பறிவு ஒழுக்கம் உடையபெருமக்காள் வணக்கம்பல
நலமொடு நற்செல்வங்கள் எலாம்மிகும் நல்வாழ்விலே
வளமொடு இன்புற்று வாழ்வாங்குவாழ்க எக்காலத்தும்!

ஏகாத கல்விதான் சாகாதகல்வி ஆகையினால்
வேகாத கால்காணல் வேண்டுமே விரைந்துஇங்கு
சாகாத நல்வரம்தரும் மருந்து அதனைக்காணவே
போகாத பொன்னடிஈயும் போனகத்தைப் போற்றுகவே!

எல்லாம் செயல்கூடும் நம்அருட்திரு அம்பலத்தே
எல்லாம் வல்லான் அருட்தாளையே ஏத்துகசித்தே
எல்லாப் புகழும் அருட்பெருஞ் ஜோதியர்க்கேநமது
எல்லா நிலையிலும் அவர்பேரருட் துணையிருக்கு!


அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!

அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

நன்றி, வணக்கம்!
அன்பன் ஆன்மநேயன்,
துரை சாத்தணன்
Sathyamangalam.  Ramanatham Sathyanarayanan  Sathyanarayanan.  S.R
Naalai namadhay
Sunday, February 18, 2018 at 22:30 pm by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R