www.vallalarspace.com/durai
மெய்ஞானத்தனியின்பம்!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

என்பும் பிறர்க்குஎனவே அருள்வழிநின்றே வாழ்கின்ற
அன்பறிவு ஒழுக்கம் உடையபெருமக்காள் வணக்கம்பல
நலமொடு நற்செல்வங்கள் எலாம்மிகும் நல்வாழ்விலே
வளமொடு இன்புற்று வாழ்வாங்குவாழ்க எக்காலத்தும்!

மெய்ஞானத்தனியின்பம் என்பது குறித்து இச்சிறுவனின் சுருக்க விளக்கத்தை இங்கே காண்போமாக.

மெய்ஞானத்தனியின்பம் = மெய்  + ஞானம்  + தனி  + இன்பம் = தனி + மெய் + ஞானம் + இன்பம் = தனி (சுத்த) + மெய் (சத்) + ஞானம் (சித்) + இன்பம் (ஆனந்தம்) = தனி + மெய் + ஞானம் + இன்பம் = சுத்த + சத் + சித் + ஆனந்தம் = சுத்த சச்சிதானந்தம் = சுத்த சிவம்

ஏனெனில், தனி = சுத்த = நிர்மல = அருள் = ஞான

மேலும் இங்கு,

மெய் = சத்து அல்லது இயற்கையுண்மை, அதாவது 'சி' - எனும் சிகரக் குறியீட்டால் சுட்டப்படும், அனந்த தாத்பரியம் முடைய எல்லாம்வல்ல மெய்ப்பொருளுக்கான அக்கரம் என்றறிவோமாக.

ஞானம் = இயற்கைவிளக்கமாகிய அருள் அதாவது 'வ' - எனும் வகர அக்கரத்தால் காட்டப்படும் ஞானஜோதியே ஆகும்.

இன்பம் = இயற்கை ஆனந்தமே, அதாவது 'ம' - எனும் மகரத்தால் குறிக்கப்படும் இயற்கைப்பூரண ஒருமைத் திருநடன இன்பானுபவமே.

"இடம்பெறும்இந் திரியஇன்பம் கரணஇன்பம் உலக
இன்பம்உயிர் இன்பம்முதல் எய்தும்இன்ப மாகித்
தடம்பெறும்ஓர் ஆன்மஇன்பம் தனித்தஅறி வின்பம்
சத்தியப்பே ரின்பம்முத்தி இன்பமுமாய் அதன்மேல்
நடம்பெறுமெய்ப் பொருள்இன்பம் நிரதிசய இன்பம்
ஞானசித்திப் பெரும்போக நாட்டரசின் பமுமாய்த்
திடம்பெறஓங் கியஇயற்கைத் தனிஇன்ப மயமாம்
திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்." - ஆறாம் திருமுறை / பதி விளக்கம்

"ஆற்றுவிட யானந்தம் தத்துவா னந்தம்

அணியோகா னந்தம்மதிப் பருஞானா னந்தம்
பேற்றுறும்ஆன் மானந்தம் பரமானந் தஞ்சேர்
பிரமானந் தம்சாந்தப் பேரானந் தத்தோ
டேற்றிடும்ஏ கானந்தம் அத்துவிதா னந்தம்
இயன்றசச்சி தானந்தம் சுத்தசிவா னந்த
ஊற்றமதாம் சமரசா னந்தசபை தனிலே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்." - - ஆறாம் திருமுறை / பதி விளக்கம்

ஆகவே,

மெய்ஞானத்தனியின்பம் = தனி + மெய் + ஞானம் + இன்பம் = தனி + சத் (சி) + சித் (வ ) + ஆனந்தம் (ம் ) = தனி + இயற்கையுண்மை ( சி ) + இயற்கைவிளக்கம் ( வ ) + இயற்கையின்பம் ( ம் ) = தனி + (சி) + (வ) + (ம்) = தனி சிவம் = சுத்த சிவம் = நிர்மல சிவம் = ஞான சிவம் = அருட் சிவம் = அருட்பெருஞ்ஜோதி என்று அறிந்தோம் அருளாளே!


வளமோடு சுத்த சிவானந்த அனுபவமெனும்
திருவருள் பெற்றியால் ஊற்றம்பெற்று ஏற்றம்
பெறுவோம் இகத்தே பரத்தைப்பெறறுத் திடம்
பெற்றே ஓங்கித் திகழ்ந்திடுவோம் எக்காலத்தும்!

கற்றிடுக சிற்றம்பலக் கல்வியைக் கற்றுக்கருணைநெறியே
உற்றிடுக எக்காலமும் சாகாமல்ஓங்கும் அருளொளிவடிவம்
பெற்றேநின் உயர்நிலையைப் பெற்றிடுக உலகில்பிறநிலைப்
பற்றுவிடுத்தே மெய்ஞானத்தனியின்பப் பற்றையே பற்றிடுகவே.

கற்றிடுக சிற்றம்பலக்கல்வி என்பது சாகாக்கல்வி
உற்றிடுக அருளொளிவடிவம் என்பது ஞானதேகம்
பெற்றிடுக நின்உயர்நிலையை என்பது அனகநிலை
பற்றிடுக மெய்ஞானத் தனியின்பமது சுத்தசிவானுபவமே.

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

நன்றி, வணக்கம்!
அன்பன் ஆன்மநேயன்,
துரை சாத்தணன்