Anandha Barathi
சத்திய ஞானசபையில் உள்ள திருவருட்பா கற்பதிப்புப் பாடல்கள் - PDF - மணிவாசகர் பதிப்பகம் 1985
வடலூர் சத்திய ஞானசபையில் உள்ள திருவருட்பா கற்பதிப்புப் பாடல்கள்:

வணக்கம்,

வடலூர் சத்திய ஞானசபையில் அழகிய இரத்தினங்கள் போலத் திருவருட்பா பாடல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

அந்தப்பாடல்களையும், எந்தப் பாடல் எங்குப் பதிக்கப்படுள்ளது என்பதையும் விளக்கும் ஒரு தொகுப்பே இக்கட்டுரை.

திருவருட்பா கற்பதிப்புப் பாடல்கள் என்னும் நூல் இந்தக் கருத்துக்களையும் பாடல்களையும் தாங்கி உயர்தவ முனைவர் ஊரன் அடிகளார் முன்னுரையோடு 1985 ஆம் ஆண்டு வெளிவந்தது,

அன்பர்கள் பயன்பெரும் பொருட்டு முனைவர் தவத்திரு ஊரன் அடிகளார் அவர்களின் முன்னுரையும், சத்திய ஞானசபையில் அழகிய இரத்தினங்கள் போல உள்ள திருவருட்பா பாடல்களும், இங்குத் தரப்பட்டுள்ளது அன்பர்கள் படித்துப் பயன்பெருவாராக!

பதிப்பின் சிறப்பு: முனைவர் தவத்திரு ஊரன் அடிகளார்

வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வாவதே!

வடலூரில் வள்ளற்பெருமான் சத்தியஞானசபையை 1872 இல் கட்டியருளினார்கள், வாரியார் சுவாமிகள் 1950 இல் அதற்கோர் பெருந்திருப்பணியைச் செய்தார். வாரியார் திருப்பணியின் போது சபையில் கல்வெட்டுப் பாடல்கள் இடம் பெற்றன, இப்பாடல்கள் அனைத்தும் திருவருட்பா ஆராய்ச்சிப் பதிப்பாளர் திரு. ஆ. பாலகிருஷ்ண பிள்ளையவர்களால் தேர்ந்தெடுக்கப்பெற்று வாரியார் சுவாமிகளால் கல்வெட்டுகளாகப் பதிப்பிக்கப்பெற்றன.

ஞானசபையின் முன்மண்டபத்தில் நாற்புறமுள்ள பனிரெண்டு தூண்களிலும் அருட்பெருஞ்ஜோதி அகவல் முழுவதும் கல்வெட்டாகப் பதிப்பிக்கப்பெற்றது. ஆதலின் இம்மண்டபம் அகவல் மண்டபம் எனப் பெயர் ஏற்பட்டு விட்டது.

பெருமான் அகவல் அருளிய நாள் ஆங்கிர சித்திரை எட்டாம் நாள்(18/4/1872) என்பது திரு. ஆ. பாலகிருஷ்ண பிள்ளை அவர்கள் கண்ட முடிபும், நமது முடிபும் ஆதுவே. ஆண்டுதோறும் சித்திரை எட்டாம் நாளை "அகவல் நாள்" எனக் கொண்டாடும் வழக்கத்தை இவ்வாண்டு முதல் அன்பர்கள் சிலர் வெளியூரிலும் வடலூரிலும் தொடங்கியுள்ளமை இன்றியமையாச் சிறப்பினதாகும்.

திக்குகள் எட்டு "எட்டுத்திசையும்" என்று பட்டினத்தடிகளும், "திக்கெட்டு" என்று அப்பர் பெருமானும் பாடுகின்றனர். "திக்கெட்டும் புகழும்" ஞானசபை "எண்கோண" வடிவில் அமைந்தது.

சபையில் எண்கோண வெளித் திருச்சுற்றிலும்,

உட்திருச்சுற்றிலும்,

சிற்சபை, பொற்சபைகளிலும்,

அகவல் மண்டபத்திலும்,

திருவாயிகளின் மேலும்,

சாளரங்களின்(சன்னல்) மேலும்,

இப்பாடல்கள் அழகுறப் பொறிக்கப் பெற்றுள்ளன.

பாடல்களின் இருபுறங்களிலும் "அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை" என்னும் மகாமந்திரம் முத்திரையாக ஓவிய அழகுடன் பதிக்கப்பெற்றுள்ளன.

ஆ.பாலகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த முறை கருத்துக்கினியது.

அவற்றை வாரியார் சுவாமிகள் கற்களில் பதிப்பித்துள்ள முறை கண்ணுக்கினியது.

இதற்காக இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

சமயாதீதப் பொதுப் பாடல்களே பொறுக்குமணிகளாகப் பொறிக்கப்பெற்றுள்ளமையின், இன்றுவரை யாரும்
குறை கூறாது போற்றி வருகின்றார்கள். போற்றிப் பயில்வதும், அச்சிற்பதிப்பித்து வழங்குவதும் அன்பர்களிடை வழக்கமாகி விட்டது. வாரியார் சுவாமிகளே தமது திருப்பணி நிறைவில் வெளியிட்ட நினைவு மலரில் சபைக்கல்வெட்டுப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டார். அத்தொகுப்பின் முதல் அச்சு இதுவே, இரண்டாவதாக, வடலூர் திரு. துறவி கந்தசாமி அவர்கள் வடலூர் சத்தியஞானசபைக் கல்வெட்டுப் பாடல்கள் என்று ஒரு நூலாக வெளியிட்டார். இது இரண்டாவது நூல். 


தற்போது உள்ள இன்னூல் சத்திய ஞானசபையில் உள்ள திருவருட்பா கற்பதிப்புப் பாடல்களோடு, தருமச்சாலையில் உள்ள பாடல்களையும் கொண்டுள்ளது, இது முன்றாவது நூல்.


இன்னுலினை அன்பர்கள் பதிவிறக்கம் செய்தும் (PDF), படித்தும், மற்றவர்களுக்கு அச்சிட்டு வழங்கியும் பயன்பெருவார்களாக!
திருஅருட்பா கற்பதிப்பு பாடல்கள்.JPG

திருஅருட்பா கற்பதிப்பு பாடல்கள்.JPG

Download: