Anandha Barathi
"பன்னிருத் திருமுறைகள் " செப்பேட்டுத் திருப்பணி
"பன்னிரு சைவத் திருமுறைகள் " செப்பேட்டுத் திருப்பணி.

வருபகற் கற்பம் பலமுயன் றாலும் வரலருந் திறனெலாம் எனக்கே
ஒருபகற் பொழுதில் உறஅளித் தனைநின் உறுபெருங் கருணைஎன் உரைப்பேன்
பெருமண நல்லூர்த் திருமணங் காணப் பெற்றவர் தமையெலாம் ஞான
உருவடைந் தோங்கக் கருணைசெய் தளித்த உயர்தனிக் கவுணிய மணியே.

என்று வள்ளலார் பெருமானார் போற்றுகின்ற "திருஞானசம்பந்தர் " அருளியத் "திருக்கடைக்காப்பு".

"கண்ணுளே விளங்குகின்ற மணியே சைவக்
கனியேநா வரசேசெங் கரும்பே வேதப்
பண்ணுளே விளைந்தஅருட் பயனே உண்மைப்
பதியோங்கு நிதியேநின் பாதம் அன்றி
விண்ணுளே அடைகின்ற போகம் ஒன்றும்
விரும்பேன்என் றனையாள வேண்டுங் கண்டாய்
ஒண்ணுளே ஒன்பதுவாய் வைத்தாய் என்ற
உத்தமனே சித்தமகிழ்ந் துதவு வோனே.

என்று வள்ளலார் பெருமானார் போற்றுகின்ற "திருநாவுக்கரசரின் " அருளியத் "தேவாரம்".

தேன்படிக்கும் அமுதாம்உன் திருப்பாட்டைத் தினந்தோறும்
நான்படிக்கும் போதென்னை நானறியேன் நாஒன்றோ
ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும்
தான்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தனையே.

என்று வள்ளலார் பெருமானார் போற்றுகின்ற "சுந்தர மூர்த்தி சுவாமிகள் " அருளியத் "திருப்பாட்டு".

வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.

என்று வள்ளலார் பெருமானார் போற்றுகின்ற "மாணிக்க வாசக சுவாமிகள் " அருளியத் "திருவாசகம்".

சத்திரங்களில் சிறந்தது என்று பெருமானார் போற்றுகின்ற "திருமூலர் " அருளியத் "திருமந்திரம்"

வள்ளல் பெருமான் அருளிய மனுமுறைகண்ட வாசகத்தின் மூல நூலாகிய "சேக்கிழாரின் - பெரிய புராணம்"

மற்றும் உள்ள இதரத் திருமுறைகளை ஆவணப்படுத்தும் நோக்கமாக "பன்னிரு சைவத் திருமுறைகள் செப்பேட்டுத் திருப்பணி" இப்போது நடைபெற்று வருகின்றது,

திருமுது குன்றத்தை (விருத்தாசலம் - கடலூர் மாவட்டம்) சேர்ந்த அன்பர்கள் (திரு. சங்கர், திரு.கிருஷ்ண பிரசாத்) செய்து வருகின்றனர்.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கத் திருப்பணியைப் பற்றி அறிந்து கொள்ளவும், அதற்கு உதவி செய்யவும் விருப்பமுள்ளவர்கள் கீழ்க்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு:

சங்கர் (09842488031) - விருத்தாசலம்.

நன்றி.
Daeiou  Daeiou.
சிறப்பான பாராட்டுதற்குரிய பணி. இவற்றையெல்லாம் ஒருங்கு சேர செய்வதே ஒரு தெய்வத் தொண்டாகும். வளரட்டும் அவர்களது பணி.
Thursday, July 24, 2014 at 13:44 pm by Daeiou Daeiou.